இந்தியா

புதுச்சேரியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்

20th Apr 2021 11:51 AM

ADVERTISEMENT

 

கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இன்று இரவு 10 மணி முதல், காலை 5 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து உணவகங்களும் இரவு 8 மணிக்குள் மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்சல் வசதி மட்டும் வழங்க அனுமதி அளித்துள்ளது. 

மேலும், புதுச்சேரியில் உள்ள கடற்கரைச் சாலை மாலை 5 மணிக்கு மூடப்படும்.

ADVERTISEMENT

திங்கள் நிலவரப்படி யூனியன் பிரதேசத்தில் இறப்பு விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது. இதையடுத்து, மீட்பு விகிதம் 88.8 சதவீதமாக உள்ளது. 

சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநரகத்தின் தகவலின்படி, இதுவரை 30,202 சுகாதாரப் பணியாளர்கள், 17,961 முன்னணி ஊழியர்கள் மற்றும் 1,08 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 
 

Tags : கரோனா புதுச்சேரி இரவு ஊரடங்கு night curfew
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT