இந்தியா

கரோனா: ஐசிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

20th Apr 2021 10:47 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக ஐசிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மாநிலக் கல்வித் திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தேர்வு எழுதுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஐசிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ICSE class 10
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT