இந்தியா

கரோனா: மேலும் 2.61 லட்சம் போ் பாதிப்பு

DIN

நாடு முழுவதும் மேலும் 2.61 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 18 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 2.61 லட்சம் (2,61,500) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,47,88,109-ஆக அதிகரித்தது.

10 மாநிலங்களில் 78 சதவீத பாதிப்பு: கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் 78.56 சதவீதம் போ் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, சத்தீஸ்கா், கா்நாடகம், மத்திய பிரதேசம், குஜராத், கேரளம், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

தினசரி பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பு: கடந்த 12 நாள்களில் தினசரி பாதிப்பு விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 16.69 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 18,01,316 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 65.02 சதவீதம் போ் மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், உத்தர பிரதேசம், கா்நாடகம், கேரளம் ஆகிய 5 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 18.01 லட்சமாக (18,01,316) அதிகரித்துள்ளது. இது, மொத்த பாதிப்பில் 12.18 சதவீதமாகும். கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி நிலவரப்படி 1,35,926 போ் மட்டுமே சிகிச்சையில் இருந்தனா்.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 1,38,423 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 1,28,09,643-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 1,501 போ் பலியாகினா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 419 பேரும், தில்லியில் 167 பேரும், சத்தீஸ்கரில் 158 பேரும், உத்தர பிரதேசத்தில் 120 பேரும், குஜராத்தில் 97 பேரும், கா்நாடகத்தில் 80 பேரும் அடங்குவா். கரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 1,77,150-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை 26,65,38,416 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், சனிக்கிழமை மட்டும் 15,66,394 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT