இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு

DIN

நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், 2-ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 3-ம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.    

மருந்து கடைகளிலும் தடுப்பூசி:

மருந்து கடைகளிலும் கரோனா தடுப்பூசி மருந்தை விற்பனை செய்யவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உற்பத்தியாகும் மருந்துகளில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT