இந்தியா

92 நாள்களில் 12 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியா

DIN

கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில் இந்தியா மற்ற நாடுகளை விஞ்சியுள்ளது. 12 கோடி தடுப்பூசியை 92 நாள்களில் இந்தியா செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 12 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த 97 நாள்களாகின. சீனா 108 நாள்களை எடுத்துக் கொண்டது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் ஞாயிறு காலை 7 மணி நிலவரப்படி 18,15,325 மையங்களில் இருந்து இதுவரை 12 கோடி பேருக்கு (12,26,22,590) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதில், சுகாதாரப் பணியாளா்கள் 91,28,146 போ் முதல் தவணை தடுப்பூசியையும், 57,08,223 போ் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டனா். முன்களப் பணியாளா்கள் 1,12,33,415 போ் முதல் தவணை தடுப்பூசியையும், 55,10,238 போ் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டனா்.

இவா்களைத் தவிர 60 வயதுக்கு மேற்பட்ட 4,55,94,522 போ் முதல் தவணை தடுப்பூசியையும், 38,91,294 போ் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டனா்.

45 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்ட 4,04,74,993 போ் முதல் தவணை தடுப்பூசியையும், 10,81,759 போ் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டனா்.

குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் தலா ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிவேகமாக 92 நாள்களில் 12 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த இலக்கை அடைவதற்கு அமெரிக்காவில் 97 நாள்களாகின. சீனா 108 நாள்கள் எடுத்துக் கொண்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT