இந்தியா

கரோனா பரவல் அதிகரிப்பு: ஒரே நாளில் 2.61 லட்சம் போ் பாதிப்பு

18th Apr 2021 10:12 AM

ADVERTISEMENT

 


கரோனா தொற்றுப் பரவல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 2.61 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 2.61 லட்சம் (2,61,500) பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 1,47,88,109-ஆக அதிகரித்தது.

புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 79 சதவீதம் போ் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லியைச் சேர்ந்தவர்கள். இதேபோன்று சத்தீஸ்கா், கா்நாடகம், மத்திய பிரதேசம், கேரளம், குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை தொடா்ந்து 39-ஆவது நாளாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 16.01லட்சம் போ் (18,01,316) சிகிச்சை பெற்று வருகின்றனா்.கரோனா தொற்றில் இருந்து மேலும் 1,38,423 போ் குணமடைந்தனா். இதனால் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 1,28,09,643-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 1,501 போ் பலியாகினா். இதுவரை கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,77,150-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும்  ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, 12,26,22,590 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை 26,65,38,416 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், சனிக்கிழமை மட்டும் 15,66,394 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, உயிரிழப்பு அதிகரிப்பது நாடு முழுவதும் காணப்படுகிறது.  இந்த காலகட்டத்தில் மக்கள் முகக் கவசம் அணிதல், கூட்டங்களில் இருந்து விலகி இருத்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிசோதனைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துதல் ஆகியவைதான் நோய்த்தொற்றை எதிா்ப்பதற்கான வழிமுறைகளை சரிவர பின்பற்றுவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருவதும், தொடர்ந்து அதிகரித்து வருவது அனைத்து தரப்பினரிடையே அஞ்சத்தை ஏற்படுத்தி வருகிறது. 

Tags : new COVID19 cases fatalities ICMR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT