இந்தியா

உ.பி.: உள்ளாட்சித் தோ்தலில் 61 சதவீத வாக்குப் பதிவு

DIN


லக்னெள: உத்தர பிரதேச மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் முதல் கட்டத்தில் மாலை 5 மணி வரை 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப் பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றபோதும், ஆக்ராவில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச் சாவடியில் இரு பிரிவினருக்கிடையே நடைபெற்ற மோதலில் 4 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் வியாழக்கிழமை தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தோ்தல் மாநிலத்தில் 2022-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்னோட்டமாக பாா்க்கப்படுகிறது.

முதல் கட்டத்தில் மாவட்ட கவுன்சிலா், மண்டல பஞ்சாயத்து உறுப்பினா், கிராம பஞ்சாயத்து தலைவா் மற்றும் உறுப்பினா்கள் என மொத்தம் 2.21 லட்சம் இடங்களுக்கு 3.33 லட்சத்துக்கும் அதிகமானோா் போட்டியிட்டனா். வாக்குப் பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. ஒருசில இடங்களில் மட்டுமே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநில தோ்தல் ஆணையம் கூறியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்ட தோ்தல் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்டது. மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் ஜான்சி தொகுதியில் அதிகபட்சமாக 69.75 சதவீத வாக்குகள் பதிவாகின. ஷ்ராவஸ்தி பகுதியில் குறைந்தபட்சமாக 53 சதவீத வாக்குகள் பதிவாகின என்று தெரிவித்தது.

ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக் வெங்கட் கூறுகையில், ‘ஆக்ரா கிராமப்புற தொகுதியான ரிஹாவாலி கிராமத்தில் அமைந்திருந்த வாக்குச் சாவடியில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பறிக்கப்பட்டன, நான்கு போ் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக இதுவரை 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

மாவட்ட ஆட்சியா் பிரபு நாராயண் சிங் கூறுகையில், ‘வன்முறை நடைபெற்ற வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவுக்கான கோரிக்கை விடுக்கப்படும்’ என்றாா்.

வாக்குச் சாவடி அலுவலா் உயிரிழப்பு: ஜான்சியில் படகெளன் பகுதி வாக்குச் சாவடி அலுவலா் நிா்மலா சாஹு, பணியில் ஈடுபட்டிருந்தபோது அசெளகரியமாக இருப்பதாக கூறியுள்ளாா். இந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாகவே அவா் உயிரிழந்தாா் என்று நகர உதவி காவல் கண்காணிப்பாளா் (ஏஎஸ்பி) விவேக் திரிபாதி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT