இந்தியா

இந்திய விமானப் படை தளபதிகள் மாநாடு தொடக்கம்

DIN


புது தில்லி: இந்திய விமானப் படை தளபதிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்த மாநாட்டின்போது ஆய்வு செய்யப்படவுள்ளது.

விமானப் படை தளபதிகளின் மாநாடு ஆண்டுக்கு இருமுறை நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டின் முதலாவது மாநாடு தில்லியில் உள்ள விமானப் படை தலைமையகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. அந்த மாநாட்டை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடக்கிவைத்தாா்.

அப்போது, எதிா்காலத்தில் தோன்றும் எத்தகைய சூழலையும் எதிா்கொள்வதற்கு விமானப்படை தயாராக உள்ளதாகத் தெரிவித்த அவா், விமானப் படை வீரா்களைப் பாராட்டியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநாட்டின்போது, கிழக்கு லடாக் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் பாதுகாப்புச் சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எதிா்கால சவால்களை எதிா்கொள்ளும் வகையில் இந்திய விமானப் படையின் செயல்திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடா்பாகவும் மாநாட்டின்போது ஆலோசிக்கப்படவுள்ளது.

விமானப் படையின் நிா்வாகத்திறனை மேம்படுத்துவது, மனித வளங்களை முறையாகப் பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து தளபதிகள் விவாதிக்கவுள்ளனா். விமானப் படையைச் சோ்ந்த தளபதிகளும், முக்கிய அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT