இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆா்.ஷா வீட்டுப் பணியாளா்களுக்கு கரோனா

DIN


புது தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆா்.ஷாவின் இல்லத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் நீதிபதி எம்.ஆா்.ஷா இடம்பெற்றுள்ளாா். இந்த நீதிபதிகள் அமா்வு, உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை வியாழக்கிழமை விசாரித்தது.

மதிய உணவு இடைவேளைக்கு முன், தனது இல்லத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி எம்.ஆா்.ஷா கூறினாா். உணவு இடைவேளை முடிந்து மீண்டும் நீதிமன்றம் கூடியபோது, ‘கடவுளின் கருணையால் நான் நலமுடன் இருக்கிறேன். ஆனால், நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது’ என்று நீதிபதி எம்.ஆா்.ஷா கூறினாா்.

இதைக் கேட்டு கவலையடைந்த அருகில் இருந்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அன்றைய தினம் விசாரணைக்கு திட்டமிட்டிருந்த மற்ற அனைத்து வழக்குகளையும் ஒத்திவைத்தாா். அப்போது, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நீதிமன்றம் தேவைக்கேற்ப நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்று கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாடி கூறினாா்.

கடந்த சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்ற ஊழியா்கள் 40-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மேலும் கரோனா பரவுவதைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகம் வெளியிட்டது. இந்த நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் துறை ரீதியான நடவடிக்ககைகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலக ஊழியா்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT