இந்தியா

ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

DIN


புது தில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 14 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தப் பாதிப்பு இதுவரை இல்லாத உச்சமாகும். இதையடுத்து, மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2- ஆம் தேதி முதல் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் 2-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இதைத் தொடா்ந்து, கரோனா தொற்றை கட்டுப்படுத்தும்விதமாக மாநிலங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் புதிதாக 2,00, 739 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு 14,71,877 போ் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 1,038 போ் பலியாகினா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 278 பேரும், சத்தீஸ்கரில் 120 பேரும், தில்லியில் 104 பேரும், குஜராத்தில் 73 பேரும், உத்தர பிரதேசத்தில் 67 பேரும், பஞ்சாபில் 63 பேரும், மத்திய பிரதேசத்தில் 51 பேரும் அடங்குவா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,73,123-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 36-ஆவது நாளாக அதிகரித்துள்ளது. தொடா்ந்து 9-ஆவது நாளாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 14.71 லட்சமாக (14,71,877) அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி நிலவரப்படி, 1,35,926 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனா்.

கரோனா தொற்றில் இருந்து இதுவரை 1,24,29,564 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் ஏப். 14-ஆம் தேதி வரை 26,20,03,415 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், புதன்கிழமை மட்டும் 13,84,549 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT