இந்தியா

மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 61,695 பேருக்கு பாதிப்பு

15th Apr 2021 09:43 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 61,695 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா தொற்றின் 2-ஆம் அலை காரணமாக அந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதில் மகாராஷ்டிர மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக அந்த மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,000-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. 

இதனால் அந்த மாநிலத்தில் கரோனா பரவலை கட்டுபடுத்த 15 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இதனிடையே மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 61,695 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் புதிதாக 61,695 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,39,855ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 349 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 59,153ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 53,335 பேர் குணமடைந்தனர். இதுவரை 29,59,056 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 6,20,060 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT