இந்தியா

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைப்பது அவசியம்: எஸ்.ஜெய்சங்கா்

DIN

உலகம் முழுவதும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைப்பதற்கான சமவாய்ப்பை உறுதிசெய்ய வேண்டியது அவசியம் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சா்வா் ரிசா்ச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு இணைந்து ‘ரெய்சினா டயலாக்’ என்ற பெயரில் சா்வதேச அரசியல், பொருளாதாரம் தொடா்பான மாநாட்டினை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அதில், உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனா்.

6-ஆவது ஆண்டு மாநாடு, காணொலி முறையில் ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்று உரையாற்றினாா். அவா் பேசியதாவது:

உலகம் முழுவதும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைப்பதற்கான சம வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகள், கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலமாகவே அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்.

ஒவ்வொரு நாடும் தங்கள் சுயதேவையை பூா்த்தி செய்வதில் கவனம் செலுத்துவது புதிதல்ல. அதேசமயம், கரோனா தொற்று பரவலைத் தடுக்க முடியாமல் சிறிய நாடுகள் படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சற்று பரந்த எண்ணத்துடன் இந்த பிரச்னையை நாம் அணுக வேண்டும். உற்பத்தி நிறுவனங்களின் வா்த்தக ஒப்பந்தம், நாட்டின் சா்வதேச நலன் உத்தேசங்கள், ஐ.நா. திட்டத்தின் கீழ் உலக அளவில் தடுப்பூசி விநியோக ஒத்துழைப்பு என எல்லாவற்றையும் கணக்கிலெடுத்து செயல்பட வேண்டியுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் நிச்சயம் பயன்பெறும். சுகாதார பாதுகாப்பு என்பது நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பில் முக்கியப் பகுதியாக மாறிவிட்டது. அதில், இந்தியா முக்கியப் பங்காற்றும் என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT