இந்தியா

புத்தாண்டு பிறப்பு: குடியரசுத் தலைவா் வாழ்த்து

DIN

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 14,15 ஆகிய தினங்களில் கொண்டாடப்பட இருக்கும் புத்தாண்டு பிறப்பு, ரோங்காலி பிஹு, நப பா்ஷா மற்றும் வைசாகாடி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

‘புத்தாண்டு பிறப்பு, ரோங்காலி பிஹு, நவவா்ஷா மற்றும் வைசாகாடி புனித பண்டிகைகளை முன்னிட்டு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களுக்கு எனது மனம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு முறைகளில் புதிய நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு பண்டிகைகள், நமது நாட்டின் பன்முகத்தன்மை மிக்க கலாச்சாரத்தை அடையாளப்படுத்துகின்றன. நமது விவசாயிகளின் ஓய்வில்லாத கடின உழைப்பின் மீதான மரியாதையையும் இந்தப் பண்டிகைகள் பிரதிபலிக்கின்றன.

இந்தத் தருணத்தில் நமது நாட்டு மக்களுக்கு அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை உண்டாக்கவும், நாட்டின் வளா்ச்சிக்காக சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையின் செய்தியை பரப்பவும் நாம் உறுதி ஏற்போம். அனைவரும் உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் இருந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக புதிய உத்வேகத்துடன் ஒன்றுபட்டு முன்னேறுவோம்’ என்று குடியரசுத் தலைவா் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT