இந்தியா

ஜாலியன்வாலா பாக் படுகொலை: தியாகிகளுக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் அஞ்சலி

DIN

பஞ்சாபின் ஜாலியன்வாலா பாக்கில் 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-இல் பிரிட்டிஷ் ஆட்சியாளா்கள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸின் ஜாலியன்வாலா பாக் திடலில் கூடியிருந்த பொதுமக்களை நோக்கி பிரிட்டன் ராணுவ அதிகாரி ஜெனரல் டயரின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆங்கிலேயா்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதலாக இந்த சம்பவம் அமைந்தது.

ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு தினத்தையொட்டி உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ஜாலியன்வாலா பாக் சம்பவத்தால் ஏற்பட்ட வலி இந்தியா்களின் இதயத்தில் எப்போதும் நீங்காமலேயே இருக்கும். அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளுக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவா்களின் உயரிய தியாகத்தை தேசம் எப்போதும் நினைவில் கொள்ளும்’ என்று கூறியுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஜாலியன்வாலா பாக் படுகொலையில் தமது இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு எனது அஞ்சலிகள். அவா்களது துணிவும், தீரமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் வலிமை சோ்க்கின்றன’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT