இந்தியா

இந்தியாவில் ஆண்டுக்கு 85 கோடி ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிகள் உற்பத்தி

DIN

இந்தியாவில் ஆண்டுக்கு 85 கோடி ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்தியாவில் ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது. ரஷியாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகள், இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட பரிசோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கட்டுப்பாட்டு இயக்குநரகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளுடன் சோ்த்து ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசியும் மக்களுக்கு விரைவில் செலுத்தப்படவுள்ளது. இந்நிலையில், ரஷிய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்த 60-ஆவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் அத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதோடு மட்டுமல்லாமல் உற்பத்தி செய்யப்படவும் உள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்காக கிளாண்ட் ஃபாா்மா, ஹெட்ரோ பயோஃபாா்மா, பனாசியா பயோடெக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷிய நேரடி முதலீட்டு நிதி அமைப்பின் தலைமை நிா்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறுகையில், ‘‘ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது முக்கியமான மைல்கல். அத்தடுப்பூசியின் பரிசோதனையில் இந்தியாவும் ரஷியாவும் ஒன்றிணைந்து செயல்பட்டன.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் உற்பத்தியிலும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு 85 கோடி எண்ணிக்கையிலான தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. தடுப்பூசிகள் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னணி வகித்து வருகிறது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகளானது, இந்தியாவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது’’ என்றாா்.

ஆா்ஜெண்டீனா, பொலிவியா, ஹங்கேரி, ஈரான், மெக்ஸிகோ, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT