இந்தியா

ஓய்வூதியத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு உயா்த்த முடிவு?

DIN

ஓய்வூதியத் துறையில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்ச வரம்பு 74 சதவீதமாக உயா்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான உச்ச வரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிப்பதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றம் கடந்த மாதம் அனுமதியளித்தது.

காப்பீட்டு (1938) சட்டத்தில் கடந்த 2015 திருத்தங்கள் மேற்கொண்டு அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து 5 ஆண்டுகளில் அந்த துறை ரூ.26,000 கோடி மதிப்பிலான அந்நிய முதலீட்டைப் பெற்றுள்ளது.

இந்த சாதகமான அம்சத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஓய்வுதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆா்டிஏ) (2013) சட்டத்திலும் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டு ஓய்வூதிய துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை அதிகரிக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. பல்வேறு துறைகளின் ஒப்புதல்களைப் பொருத்து இந்த மசோதா குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஓய்வூதிய நிதியத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு தற்போது 49 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT