இந்தியா

ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 14-இல் ஆலோசனை

12th Apr 2021 07:41 PM

ADVERTISEMENT


நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தப்படுவது பற்றி அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் ஏப்ரல் 14-ம் தேதி ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1.68 லட்சம் பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT