இந்தியா

நாட்டில் 10 கோடியைத் தாண்டியது கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை

11th Apr 2021 06:39 PM

ADVERTISEMENT

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்கு குறிப்பில், இந்தியாவில் போடப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை இன்று 10 கோடியைக் கடந்தது.

இன்று காலை 7 மணி வரை 10,15,95,147 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 35 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன. 85ஆவது நாளான நேற்று, 35,19,987 தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்தியாவில் சராசரியாக, நாள் ஒன்றுக்கு 38,34,574 தடுப்பூசிகள் போடப்படுவதால், உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,52,879 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.92 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : coronavaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT