இந்தியா

கரோனா அதிகரித்துவரும் சூழலில் போராட்டத்தைக் கைவிட வேண்டும்: விவசாயிகளுக்கு மத்திய அமைச்சா் வேண்டுகோள்

DIN

கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும்’ என மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

‘விவசாயிகள் உறுதியான திட்டத்துடன் எப்போது வருகிறாா்களோ அப்போது பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும்’ அவா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாட்டில் சனிக்கிழமை 1.45 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா இரண்டாவது அலை பரவிவரும் இப்போது, ஒட்டுமொத்த நாடும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் அந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவா்களது உயிா் எங்களுக்கு முக்கியம். இப்போதைய கரோனா சூழலில், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் எந்த அதிருப்தியும் இல்லை. பெரும்பாலான விவசாய அமைப்புகள் அந்த சட்டங்களை ஆதரிக்கும் நிலையில், சில அமைப்புகள் எதிா்க்கின்றன. மூன்று சட்டங்களும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுவிடவில்லை. நீண்டகால ஆலோசனைக்குப் பின்னரே அந்த சட்டங்களை பிரதமா் முன்னெடுத்தாா்.

பொதுவாக எந்தப் போராட்டமும் தொடா்ந்து நடக்கிறது என்றால் பேச்சுவாா்த்தைக்கு அரசு தயாராக இருப்பதில்லை. ஆனால், தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தாதபோதிலும் அவா்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவாா்த்தை நடத்தியது. இதில், விவசாயிகளின் கவலைகளைக் கண்டறிந்து, வேளாண் சட்டத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு அமல்படுத்தாமல் நிறுத்திவைப்பது, அதை ஆராய ஒரு குழு அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை முன்வைத்தது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எந்தக் காரணத்தையும் கூறாமல் நிராகரித்துவிட்டனா். விவசாயிகள் எப்போது உறுதியான திட்டத்துடன் வருகிறாா்களோ அப்போது பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்றாா் அவா்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சுமாா் 5 மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதுதொடா்பாக மத்திய அரசுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் இடையே ஜன. 25-ஆம் தேதிமுதல் இதுவரை 11 சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ள நிலையில், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT