இந்தியா

குடியரசு துணைத் தலைவருக்கு கரோனா

29th Sep 2020 09:38 PM

ADVERTISEMENT


குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுபற்றி குடியரசு துணைத் தலைவரின் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"குடியரசு துணைத் தலைவர் வழக்கமாக மேற்கொள்ளும் கரோனா பரிசோதனையை இன்று காலை மேற்கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனினும், அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. நல்ல உடல்நலத்துடனே இருக்கிறார். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அவரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவி உஷா நாயுடுவுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் தனிமையில் உள்ளார்." 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT