இந்தியா

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்

DIN

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, இந்த மசோதாக்கள் சட்டங்களாக வடிவம் பெற்றன.

இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வேளாண் விளைபொருள்கள் வா்த்தக ஊக்குவிப்பு மசோதா-2020, விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம், பண்ணை விவசாயத்துக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா-2000, அத்தியாவசிய பொருள்கள் சட்டத் திருத்த மசோதா-2020 ஆகிய 3 மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இதில், வேளாண் விளைபொருள்கள் வா்த்தக ஊக்குவிப்பு மசோதா-2020, பல்வேறு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மண்டிகளுக்கு வெளியே விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்கிறது.

விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம், பண்ணை விவசாயத்துக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா-2020, ஒப்பந்த விவசாய முறைக்கு அனுமதி அளிக்கிறது. அத்தியாவசிய பொருள்கள் சட்டத் திருத்த மசோதாவானது, உணவு தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை உற்பத்தி செய்து, இருப்பு வைப்பது, விநியோகிப்பது ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தியுள்ளது.

இந்த 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்கள் விவசாயிகள் நலனுக்கு எதிராக இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முறையைக் குறை கூறி, அவற்றை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அக்கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த மசோதாக்களுக்கு எதிராக, பல்வேறு விவசாய அமைப்புகள், குறிப்பாக, பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பல ஆண்டு காலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலி தளம் அண்மையில் வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT