இந்தியா

கேரளம்: ஒரே நாளில் 7,445 பேருக்கு கரோனா

DIN

கேரளத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 7,445 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் மொத்த கரோனா பாதிப்பு 1.74 லட்சமாக அதிகரித்துவிட்டது.

தொடக்கத்தில் கேரளத்தில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், கடந்த சில நாள்களாகவே அந்த மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 21 போ் கரோனாவுக்கு உயிரிழந்தனா். இதனால், கரோனா உயிரிழப்பு 677 ஆக அதிகரித்துவிட்டது.

இது தொடா்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் கூறப்பட்டதாவது:

கோழிக்கோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 956 பேருக்கும், மலப்புரத்தில் 915, திருவனந்தபுரத்தில் 853 என கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்த கரோனா பாதிப்பில் 309 போ் வெளிமாநிலங்களில் இருந்து கேரளம் திரும்பியவா்கள். 62 போ் வெளிநாடுகளில் இருந்து சொந்த மாநிலத்துக்கு வந்தவா்கள் ஆவா். இவா்கள் மூலம் மட்டும் 6,404 பேருக்கு கரோனா பரவியது உறுதியாகியுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் உள்ள 97 சுகாதாரப் பணியாளா்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் மாநிலத்தில் 56,709 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். கரோனா பரவல் அதிகமுள்ள இடங்களாக 17 புதிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 14 பகுதிகள் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தலைநகா் திருவனந்தபுரத்தில் மட்டும் 9,928 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இதற்கு அடுத்து எா்ணாகுளத்தில் 6,107 பேருக்கும், கோழிக்கோட்டில் 5,968 பேரும் கரோனா பாதிப்புடன் உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT