இந்தியா

நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியது

DIN


திங்கள்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியது.

நாட்டில் புதிதாக கரோனா பாதித்தோர் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், நாட்டில் புதிதாக 82,170 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் மொத்த பாதிப்பு 60,74,703 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கரோனா பாதித்து 9,62,640 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 50,16,521 பேர் குணமடைந்துள்ளனர். 95,542 பேர் பலியாகினர்.

இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நோக்கி அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT