இந்தியா

வேளாண் மசோதாக்கள் மரண தண்டனையைப் போன்றது: ராகுல் காந்தி

28th Sep 2020 02:55 PM

ADVERTISEMENT


புது தில்லி: வேளாண் மசோதாக்கள், விவசாயிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனையைப் போன்றது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, வேளாண் மசோதாக்கள், விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைப் போன்றது, அவர்களது குரல் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நசுக்கப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதற்கான சாட்சியே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு எதிராக அமைந்திருப்பதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிக்கட்சிகள், வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தோழமை கட்சிகளின் சார்பில் நாடு முழுவதும் பரவலாக ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாயிகளும் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ADVERTISEMENT

ஆனால், புதிய வேளாண் மசோதா, இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகள், விளைபொருள்களை விற்பனை செய்ய முடியும், எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்பனை செய்ய வழிவகை கிடைக்கும் என்று மத்திய அரசு சார்பில் கூறப்படுகிறது.
 

Tags : rahul gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT