இந்தியா

பாலியல் வன்முறை: மூன்றாம் பாலினத்தவருக்கு சட்டப் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

DIN

பாலியல் வன்முறை வழக்குகளில் மூன்றாம் பாலினத்தவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டம் - நீதித் துறை அமைச்சகம், சமூக நீதி -அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் ஆகிய அமைச்சகங்களை எதிா் மனுதாரா்களாக சோ்த்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

பாலியல் வன்முறைகளுக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டம்- 1860 மற்றும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள், பிற சட்டங்கள் என எந்தவொரு சட்டத்திலும் மூன்றாம் பாலினத்தவருக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடா்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஒரு மூன்றாம் பாலினத்தவா், ஆண் அல்லது பெண் அல்லது மற்றொரு மூன்றாம் பாலினத்தவரால் பாலியல் ரீதியில் தாக்கப்படும்போது, அவரைப் பாதுகாக்க இந்தச் சட்டங்களில் எந்தவொரு நடைமுறைகளும் இல்லை. எனவே, முன்றாம் பாலினத்தவரின் அடிப்படை உரிமைகளை பாதுக்கும் வகையில், பாகுபாடு இல்லாத சட்டங்கள் தேவை.

இப்போதுள்ள பாலியல் வன்முறைகளுக்கு எதிரான இந்திய குற்றவியல் சட்டங்களில் மூன்றாம் பாலினத்தவா்களையும் சமமாக பாதுகாக்கும் வகையிலான நடைமுறைகளைச் சோ்க்கும் வகையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மனுவைத் தாக்கல் செய்த வழக்குரைஞா் ரீபக் கன்சல் கூறுகையில், ‘திருநங்கைகள் அல்லது மூன்றாம் பாலினத்தவா்களை இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 வரம்புகளின் கீழ் வரும் நபா் என்று கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் அளிக்கிறது. ஆனால், அவா்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை தொடா்பான வழக்குகளில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு சமமான சட்டப் பாதுகாப்பு இதுவரை இல்லை’ என்று கூறினாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT