இந்தியா

தேவேந்திர பட்னாவிஸ் உடன் சஞ்சய் ராவத் சந்திப்பு

27th Sep 2020 06:03 PM

ADVERTISEMENT

மும்பை: சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எதிர்க்கட்சி தலைவரான தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனை ஆகிய கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், பாஜக மாநில தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாஸை சந்தித்து பேசினார். 

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், ''தேவேந்திர பட்னாவிஸ் உடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. முன்னாள் முதல்வர், மாநில கட்சியின் தலைவர், பிகார் தேர்தல் பொறுப்பாளர் என்பதால் அவரை சந்தித்து பேசினேன். இருவருக்குமிடையே கருத்தியல் ரீதியாகத்தான் வேற்றுமையே தவிர நாங்கள் எதிரிகள் அல்ல'' என்று கூறினார்.

ADVERTISEMENT

இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ''சிவசேனை கட்சியின் செய்தித்தாளுக்காக எனது நேர்காணல் வேண்டி சஞ்சய் ராவத் வந்தார். எனது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நேர்காணல் நடைபெற்றது. இதில் எந்த மாறுதல்களையும் செய்யாமல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'' என்று பட்னாவிஸ் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT