இந்தியா

உ.பி.: கரோனா குறித்து காவல்துறை விழிப்புணர்வு பேரணி

DIN

உத்தரப்பிரதேசத்தில் கரோனா தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் பேரணியில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் உத்தரப்பிரதேசம், தில்லி, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்துள்ளது. 

இதனிடையே கரோனா பரவல் குறித்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான  காவலர்கள் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்றனர். 

இது குறித்து பேசிய துணை ஆணையர், ''கரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகக்கவசம், வழங்கி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. இதில் ஏதேனும் விதிமீறல்கள் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்துகிறோம்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT