இந்தியா

உ.பி., இடைத்தேர்தல்: 2 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தது காங்கிரஸ்

27th Sep 2020 09:41 PM

ADVERTISEMENT

உத்தப் பிரதேச இடைத்தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களின் பெயரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 8 தொகுதிகளில் 6 தொகுதிகள் பா.ஜ.க. வசமும், 2 தொகுதிகள் சமாஜவாதி வசமும் இருந்த தொகுதிகளாகும். 

இந்த நிலையில் உத்தப் பிரதேச இடைத்தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களின் பெயரை காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது. இதன்படி சுவார் தொகுதியில் ஹைதர் அலி கானும், பங்காமாவ் தொகுதியில் ஆர்த்தி வாஜ்பேயியும் போட்டியிடுகின்றனர். 

இதேபோல் விரைவில் நடக்கவுள்ள மத்தியப் பிரதேச இடைத்தேர்தலுக்கான 9 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலையும் காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT