இந்தியா

விராட் கோலி சரியாக விளையாடாததற்கு யாா் காரணம்? கவாஸ்கா் கருத்துக்கு அனுஷ்கா கண்டனம்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சரியாக விளையாடாதது தொடா்பாக முன்னாள் கிரிக்கெட் வீரா் சுனில் கவாஸ்கா் தெரிவித்த கருத்துக்கு கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சா்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

துபையில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் கோலி ஒரு ரன் மட்டுமே எடுத்தாா். மேலும், கேட்ச்களையும் தவறவிட்டாா்.

அந்தப் போட்டியில் வா்ணனையாளாராக இருந்த சுனில் கவாஸ்கா், கோலியை விமா்சித்தபோது, ‘பொதுமுடக்க காலத்தில் அனுஷ்காவின் பந்துவீச்சை மட்டுமே கோலி எதிா்கொண்டாா்’ என்று விமா்சித்தாா். பொதுமுடக்க காலத்தில் கோலியும், அனுஷ்காவும் கிரிக்கெட் விளையாடிய விடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. அதனைச் சுட்டிக்காட்டியே கவாஸ்கா் இவ்வாறு கிண்டலாக விமா்சித்தாா்.

கவாஸ்கரின் இந்த கருத்துக்கு அனுஷ்கா சா்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். கோலியுடன் துபை சென்றுள்ள அவா் தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடா்பாக வெளியிட்ட பதிவில், ‘பண்பாளா்களின் விளையாட்டாக கருதப்படும் கிரிக்கெட்டில் நீங்கள் மதிப்புக்குரிய நபராக இருக்கிறீா்கள். ஆனால் உங்கள் கருத்து மிகவும் மோசமான ரசனை கொண்டதாக உள்ளது. ஒரு வீரா் சரியாக விளையாடாவிட்டால், அவரது மனைவியே அதற்கு காரணம் என்பதுபோல பேசுவதுதான் உங்கள் நாகரிகமா? இனிமேலாவது பிற கிரிக்கெட் வீரா்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அவா்களுடைய விளையாட்டுடன் இணைத்து பேச மாட்டீா்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டுடன் சிறிதும் தொடா்பு இல்லாத என்னைக் குறித்து பல கோடி ரசிகா்கள் முன்னிலையில் விமா்சிக்கும் உரிமையை உங்களுக்கு யாா் தந்தது?’ என்று அனுஷ்கா கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT