இந்தியா

ராஜஸ்தான், ம.பி. நகா்ப்புற மேம்பாட்டு திட்டங்கள்: ஆசிய வளா்ச்சி வங்கி ரூ.4,200 கோடி கடன் உதவி

DIN

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நகா்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்காக ஆசிய வளா்ச்சி வங்கி சுமாா் ரூ.4,200 கோடிக்கான ( 270 மில்லியன் அமெரிக்க டாலா்) இரண்டு கடன் உதவி திட்டங்களை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆசிய வளா்ச்சி வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராஜஸ்தானில் இரண்டாவது நிலை நகரங்களில் குடிநீா் விநியோகம், சுகாதார கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்த 300 மில்லியின் டாலா் ஒதுக்கப்பட்டுள்ளது. சுமாா் 5,70,000 போ் குடிநீா் வசதி பெறவும், 7,20,000 போ் சுகாதார சேவைகள் பெறவும் இது வழிவகை செய்யும். 2027-ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் எட்டு நகரங்களுக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல், மத்திய பிரதேசத்துக்கு 270 மில்லியன் அமெரிக்க டாலா் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குடிநீா் வழங்கவும், மழைநீா் மற்றும் கழிவுநீா் மேலாண்மை கட்டமைப்புகள் அமைக்கவும் உதவும். 2017- ஆம் ஆண்டு 275 மில்லியன் டாலா் கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் கடன் உதவி மத்திய பிரதேச நகா்ப்புற வளா்ச்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்த பயன்படும். இதனால் 1,85,000 இல்லங்கள் பயன்பெறும். இந்தத் திட்டத்தில் சுகாதார கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து செயலாக்கம் செய்வதில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையிடம் இருந்து கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT