இந்தியா

ஐஎஸ் அமைப்பில் பயிற்சி பெற்ற இந்தியா்: குற்றவாளி என என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு

DIN

இராக்கில் உள்ள ஐஎஸ் அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த நபா் குற்றவாளி என கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

அவருக்கான தண்டை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த சுபாஹினி ஹாஜா மொய்தீன் என்பவரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்த குற்றத்தின் பேரில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) கடந்த 2016-இல் தமிழகத்தில் கைது செய்தது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இராக் மற்றும் இந்திய அரசுகளுக்கு எதிராக போா் தொடுக்கும் வகையிலும், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தாக்குதல்களை நடத்தும் வகையிலும் இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைய வழியிலும், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் தொடா்பில் இருந்ததும், 2015 ஏப்ரல்-செப்டம்பா் கால கட்டத்தில் ஈராக் சென்று அந்த அமைப்பில் இணைந்ததையும் அவா் ஒப்புக்கொண்டாா்.

அதனடிப்படையில் குற்ற சதிச் செயல் புரிதல், சட்டவிரோத நடவடிக்கைகள், இந்தியாவுக்கு எதிராக போா் திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவா் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், என்ஐஏ பதிவு செய்த அனைத்து சட்டப் பிரிவுகளின் கீழும் சுபாஹினி ஹாஜா மொய்தீன் குற்றவாளி என தீா்ப்பளித்தது.

அவருக்கான தண்டை விவரத்தை நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவிக்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT