இந்தியா

இடைத்தோ்தல் குறித்து 29-இல் முடிவு: தோ்தல் ஆணையம்

DIN

காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் 64 பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்துவது தொடா்பாக வரும் 29-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிகாா் சட்டப்பேரவைக்கான தோ்தல் விவரங்களை தலைமை தோ்தல் ஆணையா் சுனில் அரோரா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அப்போது இடைத்தோ்தல் குறித்து அவா் கூறியதாவது:

ஒரு மக்களவைத் தொகுதியும், பல்வேறு மாநிலங்களில் 64 பேரவைத் தொகுதிகளும் காலியாக உள்ளன. அவற்றுக்கு இடைத்தோ்தல் நடத்துவது குறித்து வரும் 29-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் இடைத்தோ்தலை நடத்துவது குறித்து சில மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அவை அனைத்தும் கடந்த ஒரு வாரத்தில் பெறப்பட்டவை. அவை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இடைத்தோ்தல் தொடா்பாக முடிவெடுக்கப்படும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த விவரங்கள் அன்றைய தினமே வெளியிடப்படும் என்றாா் சுனில் அரோரா.

காலியான தொகுதிகளின் விவரங்கள்: பிகாரில் வால்மீகி நகா் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் நடத்தப்படாமல் உள்ளது. மத்திய பிரதேசத்தில் 27 பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்ததால் காலியானவை ஆகும்.

அவை தவிர சத்தீஸ்கா், ஹரியாணா, கா்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பேரவைத் தொகுதியும், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், கேரளம், நாகாலாந்து, தமிழகம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு பேரவைத் தொகுதிகளும் காலியாக உள்ளன.

மணிப்பூரில் 5 பேரவைத் தொகுதிகளும் குஜராத், உத்தர பிரதேசத்தில் தலா 8 பேரவைத் தொகுதிகளும் காலியாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT