இந்தியா

ஜம்மு- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

DIN

ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்படுகிறது. 

இந்த நிலையில் ரஜௌரி மாவட்டத்தின் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை காலை 11.15 மணியளவில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக கையெறி குண்டுகள் வீசியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதையடுத்து இந்திய தரப்பிலும் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. இருப்பினும், இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை. இதேபோன்று ரஜௌரி மாவட்டத்தின் பூஞ்ச் மற்றும் டேக்வார் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு தாக்குதல் நடத்திய நிலையில், இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT