இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 430 பேர் கரோனாவுக்கு பலி

DIN


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,419 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவல்களை அந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,419 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,21,176 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 23,644 பேர் குணமடைந்துள்ளனர், 430 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 10,16,450 பேர் குணமடைந்துள்ளனர், 35,191 பேர் பலியாகியுள்ளனர். 2,69,119 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் இறப்பு விகிதம் 2.66 சதவிகிதமாக உள்ளது. கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 20.74 சதவிகிதமாக உள்ளது. 19,45,758 பேர் வீடுகளிலும், 30,571 பேர் கரோனா மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT