இந்தியா

விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசு: சச்சின் பைலட்

26th Sep 2020 08:38 PM

ADVERTISEMENT

விவசாய மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் சச்சின் பைலட் குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாய மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சனிக்கிழமை காணொலியில் பேசிய சச்சின் பைலட், “மத்திய அரசு விவசாய மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும்.” என  வலியுறுத்தினார்.

மேலும் அவர், “நாடாளுமன்றத்தில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம் ஜனநாயக விரோதமானது. இன்று நாட்டில் இதற்கு எதிராக கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன" என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சொந்த அமைச்சரை சமாதானப்படுத்த முடியாதபோது விவசாயிகளுக்கு எப்படி மத்திய அரசு நம்பிக்கை தரும் எனக் கேள்வி எழுப்பிய சச்சின், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Sachin Pilot
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT