இந்தியா

ஆந்திரம், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம்

26th Sep 2020 09:50 PM

ADVERTISEMENT

ஆந்திரம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஆந்திரத்தில் 7,293 பேருக்கும், கர்நாடகத்தில் 8,811 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று ஒரேநாளில் மேலும் 7,293 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,68,751ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் மொத்தம் 5,663 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில் 9,125 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்தமாக 5,97,294 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 65,794 சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 75,990 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று மேலும் 8,811 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,66,023 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கரோனா தொற்றுக்கு 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,503 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 5,417 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,55,719ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,01,782 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக பெங்களூருவில் இன்று 4,083 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT