இந்தியா

தெலங்கானா: 6 மாதங்களுக்குப் பிறகு பேருந்து போக்குவரத்து தொடக்கம்

25th Sep 2020 02:49 PM

ADVERTISEMENT

தெலங்கானாவில் கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து சேவை ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பேருந்து, ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இதனிடையே நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தெலங்கானாவிலும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்துபேசிய மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் புவாடா அஜய் குமார், ''ஹைதராபாத்தில் 29 பணிமனைகளில் உள்ள 2,800 பேருந்துகளில் 25 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கனவே ஹைதராபாத் புறநகர் மற்றும் மப்சல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த முடிவு முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள் குறித்து அதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு முடிவு செய்வார்கள்.

பேருந்துகள் அனைத்தும் கரோனா விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம், கிருமிநாசினி தெளித்து, சமூக இடைவெளியுடன் பயணிகளை அனுமதிக்க வேண்டும்.  

ராஜேந்தர் நகர், மகேஸ்வரம், இப்ராஹிம்பட்டணம் மற்றும் பாண்ட்லகுடா ஆகிய பணிமனைகளிலிருந்து முதற்கட்டமாக பேருந்துகள் இயக்கப்படும்'' என்று அமைச்சர் புவாடா அஜய் குமார் கூறினார்.

Tags : தெலங்கானா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT