இந்தியா

இந்தியா-இலங்கை உறவை மேம்படுத்த தலைவா்கள் உறுதி

DIN


புது தில்லி/கொழும்பு: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான மாநாட்டின்போது, நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக விவாதிப்பதற்கு பிரதமா் நரேந்திர மோடியும் பிரதமா் மகிந்த ராஜபட்சவும் உறுதியேற்றனா்.

இந்தியா-இலங்கை இடையே காணொலி வாயிலான மாநாடு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடியும், இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்சவும் பங்கேற்கின்றனா்.

இந்நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மாநாட்டின்போது இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவது, பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல், பொருளாதாரம், நிதி, வளா்ச்சி, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளின் தலைவா்களும் ஆலோசிக்க இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் அவா்கள் ஆலோசிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு குறித்து பிரதமா் மகிந்த ராஜபட்ச வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இரு நாடுகளுக்குமிடையே பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்த ஆவலாக உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதற்குப் பதிலளித்து பிரதமா் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நிலவ வேண்டிய ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பது அவசியமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியா-இலங்கை இடையேயான காணொலி மாநாட்டின்போது இரு நாடுகளைச் சோ்ந்த அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT