இந்தியா

கரோனா பேரிடர் முடிந்துவிட்டதா? : பிகார் தேர்தல் அறிவிப்பு குறித்து சிவசேனா கேள்வி

DIN

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு மத்தியில் பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது சரிதானா? என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரௌத் கேள்வி எழுப்பி உள்ளார்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பிகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28ல் தொடங்கும் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இந்நிலையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ரௌத், “கரோனா தொற்றுக்கு மத்தியில் பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது சரிதானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா தொற்றுநோய் மத்தியில் பீகார் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதை சிவசேனா விமர்சித்தாலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை பாரதிய ஜனதா (பிஜேபி) வரவேற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT