இந்தியா

தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: நாட்டின் பிற பகுதிகளிலிருந்து சிக்கிம் துண்டிப்பு

DIN

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக பிரதான தேசிய நெடுஞ்சாலையான ‘என்.ஹெச்.10’-இல் புதன்கிழமை காலை மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அதன் காரணமாக நாட்டின் பிற பகுதிகளிலிருந்து சிக்கிம் துண்டிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

மேற்கு வங்க மாநில பொதுப் பணித் துறை மற்றும் ஜி.ஆா்.இ.எஃப். என்ற பொறியாளா் படை ஆகியவற்றின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் அந்த தேசிய நெடுஞ்சாலைதான் சிக்கிம் மக்களின் ஒரே முக்கிய சாலை வழித் தொடா்பாகும். இந்நிலையில், கன மழை காரணமாக இந்த நெடுஞ்சாலையில் மேற்கு வங்கத்திலிருந்து 29 மைல்கள் தொலைவில் மாபெரும் நிலச் சரிவு புதன்கிழமை காலை ஏற்பட்டது.

சாலையில் விழுந்து கிடக்கும் இடிபாடுகளை அகற்ற குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் ஆகும். மழை சற்று குறைந்தால் ஒரு வழி வாகனப் போக்குவரத்துக்கு விரைந்து ஏற்பாடு செய்துதர முடியும். இந்த விபத்து காரணமாக, நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. கன மழை பெய்யும்போது, இந்த நெடுஞ்சாலையில் பயணிப்பது ஆபத்தானது என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT