இந்தியா

சச்சின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

DIN

ஐ.பி.எல் தொடரில் வேகமாக 2000 ரன்களைக் கடந்து சச்சின் தெண்டுல்கரின் சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் மற்றும் பெங்களுரூ இடையேயான லீக் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.

இதில் அதிரடி காட்டிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 69 பந்துகளுக்கு 132 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டிய இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.

28 வயதான கே.எல்.ராகுல் தனது 60 வது ஐபிஎல் இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 63 இன்னிங்ஸில் 2000 ரன்களை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.. வெளிநாட்டு வீரர்களில் கிறிஸ் கெய்ல் 48 இன்னிங்ஸில் 2,000 ரன்களை எட்டிய வேகமான ஆட்டக்காரர் என்ற சாதனையை (48 இன்னிங்ஸ்) கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT