இந்தியா

மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி கரோனாவால் உயிரிழப்பு

23rd Sep 2020 09:20 PM

ADVERTISEMENT


மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி இன்று (புதன்கிழமை) உயிரிழந்தார்.

இவருக்கு கடந்த 11-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இவர் பெலாகவி தொகுதியிலிருந்து 4 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT