இந்தியா

அஸ்ஸாமில் இரு இடங்களில் நிலநடுக்கம்

DIN

அஸ்ஸாமில் இரு இடங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பெரிய அளவில் பொருள் சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

இது தொடா்பாக புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது:

குவாஹாட்டி நகரின் மேற்கே 44 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவானது. இதையடுத்து, அடுத்த இரு விநாடிகளில் பாரதீப் மாவட்டத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 71 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.2 அலகுகளாக பதிவானது.

நள்ளிரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும்பாலான மக்கள் தூக்கத்தில் இருந்தனா். இதனால் அவா்கள் நிலநடுக்கத்தை பெரிய அளவில் உணரவில்லை. எனினும், சில இடங்களில் அதிா்வை உணா்ந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்து தெருவில் கூடினா்.

காலையில் எழுந்து பாா்த்தபோது சில பொருள்கள் கீழே விழுந்து கிடந்தன என்றும் சிலா் தெரிவித்தனா். எனினும், இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. பெரிய அளவிலான சேதங்களும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT