இந்தியா

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

23rd Sep 2020 07:24 PM

ADVERTISEMENT

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளை தடுப்பது குறித்து 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்கள் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா பாதிப்பில் முன்னணியில் உள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில சுகாதார அமைச்சர்களும் பங்குபெற்றனர். 

தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், தில்லி மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT