இந்தியா

இந்தியா - இலங்கை இடையே வரும் 26-ல் இருதரப்பு உச்சிமாநாடு

23rd Sep 2020 12:15 PM

ADVERTISEMENT

இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ஆம் தேதி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச உடன் காணொலி காட்சி வாயிலாக இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் இரு நாட்டு உறவுகளை கட்டமைப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிந்து முதன்முறையாக ராஜபட்ச இந்தியாவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை பிரதமர் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்து சென்ற பிறகு முதன்முறையாக அதிகாரப்பூர்வமான ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : இந்தியா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT