இந்தியா

ஒடிசா: இறந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை தேவையில்லை

DIN

ஒடிசாவில் இறந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இறந்தபின்னர் நோய்த்தொற்று உறுதிசெய்யப்படும் நபர்களின் இறுதிச் சடங்குகளில் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் கலந்துகொள்ளாமல் விலகிய சம்பவங்களால் இந்த உத்தரவு தூண்டப்பட்டது

கரோனா நோயாளிகளின் அனைத்து மரணங்களும் இறப்புக்கான காரணத்தை தீர்மானிக்க மாநில அளவில் தணிக்கை செய்யப்படுகின்றன.

மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பே நோயாளிகளுக்கு ஏற்கனவே உள்ள நோய்கள் குறித்த தகவலை அறிந்து மாநில குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும். 

கரோனா வைரஸ் தொற்று இல்லாமல் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இதுவரை 53 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசாவில் கரோனா தொற்றிலிருந்து 1,53,213 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 736-ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவால் பாதிக்கப்படு 38,546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோர் விகிதம் 1.5 லட்சத்தை எட்டியதற்கு மருத்துவர்கள், மற்றும் தூய்மை பணியாளர்களின் கடின உழைப்பே காரணம் என்று முதல்வர் நவீன்பட்நாய தமது சுட்டுரைப் பக்கத்தில் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT