இந்தியா

நாட்டில் புதிதாக 83,347 பேருக்கு தொற்று; மேலும் 1,085 பேர் பலி

DIN

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 லட்சத்தைக் கடந்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 83,347 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 1,085 பேர் உயிரிழந்துள்ளனர். 

புதன்கிழமை காலை நிலவரப்படி, நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 56,46,011 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், 45,87,614 போ் இதுவரை தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,085 பேர் உள்பட இதுவரை கரோனாவுக்கு 90,020 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 9,68,377 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஒட்டுமொத்தமாக 6,62,79,462 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை மட்டும் 9,53,683 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT