இந்தியா

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி

23rd Sep 2020 06:13 PM

ADVERTISEMENT


தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா தொற்று பாதித்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த மணீஷ் சிசோடியாவுக்கு அதிக காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால், உடனடியாக தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு செப்டம்பர் 14-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தொடா்பாக மணீஷ் சிசோடியா தனது சுட்டுரையில் கூறியிருந்ததாவது, ‘லேசானா காய்ச்சலைத் தொடா்ந்து எனக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எனக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. நான் நலமாக உள்ளேன். என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். உங்கள் அனைவரின் ஆசிா்வாதத்தால் விரைவில் மீண்டு வந்து மக்கள் பணியாற்றுவேன்’ என்று தெரிவித்திருந்தார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT