இந்தியா

புதுதில்லியில் முன்னேற்றம் கண்ட காற்றின் தரம்

DIN

தில்லியில் சமீபத்தில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சாஃபர் எனப்படும் காற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனா பொதுமுடக்கத்திற்கு முன் காற்றின் மாசுபாடு உச்சநிலையில் இருந்தது. இதனால் சாலைகளில் இயல்பாக நடமாட முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்கள் இயங்கின. 

இந்நிலையில் சமீபத்தில் தில்லியில் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தில்லியில் புதன்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரக் கட்டுப்பாட்டு அளவு 113 ஆகப் பதிவாகி உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது செவ்வாய்க்கிழமை 120 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் ஆனந்த் விஹார், பவானா மற்றும் ஐ.ஐ.டி-டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரக் கட்டுப்பாடு அளவுகள் முறையே 102, 135 மற்றும் 101 என்ற அளவில் பதிவாகி உள்ளன.

டெல்லி பல்கலைக்கழகம், பூசா சாலை, லோதி சாலை, மதுரா சாலை மற்றும் ஐஜிஐ விமான நிலையம் (டெர்மினல் 3) ஆகிய பகுதிகள் முறையே 92, 86, 66, 88 மற்றும் 100 என்ற காற்று தரக்கட்டுப்பாட்டு அளவைப் பதிவு செய்துள்ளன.

காற்று தரக் கட்டுப்பாடு அளவின் எண்ணிக்கை 51 முதல் 100 வரையிலான வரம்பு திருப்திகரமானது என்றும், 101 முதல் 200 வரையிலான வரம்பு மிதமானது என்றும் குறிப்பிடப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT