இந்தியா

தாணே கட்டட விபத்தில் பலி 20 ஆக உயர்வு

22nd Sep 2020 02:55 PM

ADVERTISEMENT

 

தாணே: மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நகரில் அடுக்குமாடிக் கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விபத்துக்குள்ளானதில், மேலும் ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, மொத்த உயிரிழப்பு 20 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 2 குழந்தைகள், 7 சிறுவர்கள், 7 ஆண்கள், 4 பெண்கள் என 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 20 போ் உயிருடன் மீட்கப்பட்டனர்.

தாணே நகரிலிருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பிவாண்டி நகரில் அமைந்திருந்த இந்த மூன்று மாடிக் கட்டடம், திங்கள்கிழமை அதிகாலையில் குடியிருப்புவாசிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இடிந்து விழுந்தது.

ADVERTISEMENT

இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய பேரிடா் மீட்புப் படையினா், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து பிவண்டி-நிஜாம்பூா் மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியது: ‘43 ஆண்டுகள் பழைமையான இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 40 வீடுகள் உள்ளன. அவற்றில் 150 போ் வசிக்கின்றனா். இந்த நிலையில், அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி திங்கள்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு இடிந்து விழுந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் அனைவரும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனா்.

மீட்புப் படையினா் விரைந்து வந்து மோப்ப நாய் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அதில், இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 வயது சிறுவன் உள்பட 20 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். விபத்தில், 7 சிறுவா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா். இந்த விபத்தில் காயமடைந்தவா்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று கூறினாா்.
 

Tags : building collapse
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT